மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சூர்யா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சூர்யா

மாற்றான் படத்துக்குப் பிறகு சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இனி அமையாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் இருவரும் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

மலேசிய நட்சத்திர கலை விழாவை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை திரும்பிய சூர்யா, தானா சேர்ந்த கூட்டம் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரம்காட்டி வருகிறார். பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு (கேங்) ஆகிய இரு மொழிகளிலும் இந்தப் படம் வெளிவரவிருப்பதால் ஹைதராபாத்தில் படத்துக்காக பல பேட்டிகள் கொடுத்துவருகிறார்.

அப்போது, ‘உங்களின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார்?’ எனக் கேட்கப்பட்ட போது, “என்னுடைய அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் சார் இயக்க இருக்கிறார். அதற்கடுத்தாக ‘24’ படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் மற்றும் ஹரி சார் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் கேரக்டருக்கு சூர்யா கடினமான உழைப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்துக்குத் தேவையான கிராஃபிக்ஸ் காட்சிகளைத் தாண்டியும் சூர்யாவுக்குத் தெரியாமல் கூடுதல் காட்சிகளை எடுத்து படக்குழு மறைத்து வைத்திருப்பது அறிந்து, அதற்கான ஆவணங்களை சூர்யா வாங்கிக் கொண்டதாகக் கூறப்பட்டது. கே.வி.ஆனந்த்தின் இத்தகைய செயல்களால் சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணி இனி ஒருபோதும் அமைய வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டவேளையில் மீண்டும் அவருடன் மூன்றாவது முறையாக இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் சூர்யா.

தானா சேர்ந்த கூட்டம் படத்தைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

திங்கள் 8 ஜன 2018