மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கோப்பு அட்டைகளாகும் பழைய 500,1000 நோட்டுக்கள்!

கோப்பு அட்டைகளாகும் பழைய 500,1000 நோட்டுக்கள்!

பழைய மற்றும் கிழிந்த 500,1000 ரூபாய் நோட்டுகளைப் புழல் சிறையில் உள்ள கைதிகளைக் கொண்டு அரைத்துக் கூழாக்கி, கோப்பு அட்டைகள் (ஃபைல்) தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

சென்னை புழல் மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகளைக் கொண்டு பேக்கரி பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து, சிறை வளாகத்தில் அங்காடி அமைத்து விற்பனை செய்துவருகின்றனர். மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை தற்போது ஆயுள் தண்டனை கைதிகள் மூலம் அரைத்து, ஆவணங்கள் வைக்கப் பயன்படும் கோப்பு அட்டைகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இது குறித்து தமிழக சிறைத் துறை டி.ஐ.ஜி. ஏ. முருகேசன் பிடிஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "மத்திய ரிசர்வ் வங்கி, புழல் சிறைச்சாலைக்கு சுமார் 70 டன் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வழங்கியுள்ளது. அதில் இதுவரை 1½ டன் நோட்டுக்கள் கோப்பு அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டது. முதலில் ரூபாய் நோட்டுகள் கைதிகளைக் கொண்டு சிறிய துண்டுகளாக வெட்டப்படுகின்றன. அவற்றைப் பெரிய தொட்டியில் போட்டு அரைத்துக் கூழாக மாற்றி பின்னர் அச்சுகளின் உதவியோடு கோப்பு அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு இயந்திரப் பயன்பாடின்றி தினமும் சுமார் 1,000 கோப்பு அட்டைகள் வரை தயாரிக்கப்படுகின்றன.

இந்தப் பணியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட 25 முதல் 30 ஆயுள் தண்டனைக் கைதிகள் ஈடுபடுகின்றனர். தினமும் 8 மணி நேர வேலைக்கு அவர்களுக்கு ரூ.160 முதல் ரூ.200 வரை கூலி கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 25 நாட்கள் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் அவசரக் கோப்பு அட்டைகள், சாதாரணக் கோப்பு அட்டைகள் என அடையாளக் குறியீடுகளும் இணைக்கப்படுகின்றன. தயார் செய்யப்பட்ட கோப்பு அட்டைகள் அனைத்தும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக சிறைகளிலிருந்து மாதத்திற்கு 1½ லட்சம் கோப்பு அட்டைகள் தயார் செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018