மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்!

ஒரு மாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்!

ஒரு மாதத்திற்குள் நேரடி அரசியலில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தான் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக குறிப்பிட்டு, அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சாதி, மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல்தான் தனது நோக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் அரசியலில் நுழையவுள்ள நிலையில், இவர்களுக்கு முன்னதாகவே அரசியலில் ஈடுப்பட்டு வந்தவர் நடிகர் பாக்யராஜ், சில ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் பாக்யராஜ் இன்னும் ஒரு மாதத்திற்குள் நேரடி அரசியலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தனது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாக்கியராஜ், "அரசியலுக்கு கமல்ஹாசன் வருவதாகக் கூறியுள்ளார், ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுவதில் எந்தத் தவறும் இல்லை. அது அவர்களுடைய உரிமை. அவர்களை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் நீடிப்பது என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது"என்றார்.

பாக்யராஜிடம் வருங்காலத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, "எதிர்பாராத விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதற்கான சூழ்நிலைகள் வரும்போது அதுகுறித்து யோசிப்பேன். ஆனால் அது நீண்ட காலமாக இருக்காது. அதிவிரைவில் ஒரு மாதத்திற்குள் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருக்கு ஆதரவு, ஏன் ஆதரவு என அப்போது சொல்வேன் " என்று பதிலளித்துள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018