வண்டியில ஏறலாமா? ஏறப்புடாதா? :அப்டேட் குமாரு

கண்டக்டர் வர்றதுக்கு முன்னால கவுண்டமனி காக்கி சட்டை, ஹேண்ட் பேக்லாம் மாட்டிகிட்டு எல்லார்டையும் டிக்கெட் கொடுத்து பணத்தை ஆட்டைய போடுவாரே அந்த காமெடி ஞாபகம் இருக்கா. இன்னைக்கு ஒருத்தர் மஞ்சப்பையை மாட்டிகிட்டு வந்து டிக்கெட் கொடுக்கும் போது அதான் ஞாபகம் வந்துச்சு. ஏற்கனவே ஆக்டிங் டிரைவர் வண்டி ஓட்டும் போது, ஊரு போய் சேருவமா இல்ல ஒரேயடியா போய் சேர்ந்துருவமான்னு திக் திக்குனு இருக்கு. இதுல டிக்கெட் கேட்குறவரை பார்த்தாலே காசை வாங்கிட்டு அடுத்த ஸ்டாப்ல இறங்கி போயிடுற ஆள் மாதிரி தான் தெரியுது. இந்த குழப்பத்துல யாராவது காக்கி பேண்ட் போட்ருந்தா என்ன ஏதுன்னு கேட்காம காசை கொடுத்து தாம்பரம் ரெண்டு டிக்கெட்டுன்னு கேட்ருவாங்க. இதுவும் நல்ல யோசனையா இருக்குன்னு யாரும் ட்ரை பண்ணிடாதீங்க. வந்தம்மா அப்டேட்டை பார்த்து லைக் போட்டமான்னு இருக்கனும். இல்லைன்னா நான் தான் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தேன்னு என்னை ரவுண்டு கட்டிருவாங்க. ஆமா.. இன்னைக்கு ஆளுநர் வாசிச்ச உரை பழனிசாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுல வாசிச்ச உரையோட ஆங்கில மொழிபெயர்ப்புன்னு சொல்றாங்களே உண்மையா? அது சரி ரெண்டு பேருக்கும் ஒரே ஆள் தானே எழுதி கொடுக்குறாரு.
@BoopatyMurugesh
முன்னலாம் பஸ் வரத பார்த்தா சீட் புடிக்க பஸ்ஸ நோக்கி ஓடுவானுங்க..
தற்காலிக ஓட்டுனர்கள் வந்த பிறகு பஸ் வரத பார்த்தா உசுர காப்பாத்திக்க விலகி ஓடுறானுங்க..
@Prabakar Kappikulam
வணக்கம்.
தலைப்புச் செய்திகள்...
தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழில் வணக்கம் சொன்னார்.
@devil_girlpriya
ஜெ., வகுத்த பாதையில் செல்லும் தமிழக அரசு: கவர்னர்
புரிந்தது, ஜெயா & சசிகலா போல் EPS & OPS இறுதியில் உள்ளே என்பதை மறைமுகமாக சொல்லுறாப்ல
@Nithya
'ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு - செய்தி
அப்ப கட்சியோட பெயர் என்ன
"முருங்கக்காய் முன்னேற்ற கழகம்"ஆ
@senthilcp
முதல்வர் எனக்கு முன்னாள் நண்பர் தான்... அவரை சந்திப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை −தினகரன் # முதுகுல குத்துனது நண்பனா இருந்தா .... மொமெண்ட்
@Prabakar Kappikulam
ஆமா… நம்ம அன்புச்செழியன் என்ன ஆனாரு..?
டீலிங் முடிஞ்சிட்டா..
@isr_selva
ஏனோ தெரியவில்லை! அரசும் மீடியாவும் சிவகாசியில் வேலை இழந்து தவிக்கும் இரண்டு இலட்சம் தொழிலாளர்களை கண்டுகொள்ளவே இல்லை. கிட்டத்தட்ட 800 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருக்கு. பல முக்கிய கோரிக்கைகளோட போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா அரசியல்கட்சிகள் கூட இதை கண்டுகொள்ளவில்லை.
@Boopathy Murugesh
நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல.. மக்கள் போராட்டத்தில் கலந்துக்காம மொபைல் ஆப் வெளியிடும் நடிகர்களை பார்த்து கேட்கிறேன்..
அரசியல் கட்சி ஆரமிக்க போறீயா? சாப்ட்வேர் கம்பனி ஆரமிக்க போறீயா?
@HAJAMYDEENNKS
அரசியல்வாதிகள் மக்களிடம் மறைமுகமாக கொள்ளை அடிக்கிறாங்க.. நடிகர்கள் கலைநிகழ்ச்சி , நட்சத்திர கிரிக்கெட் என்ற பெயரில் நேரடியாக கொள்ளை அடிக்கிறாங்க...!
@idumbaikarthi
ரம்ஜானுக்கு நோன்பு காஞ்சி குடிக்கச் செல்லும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். வகையறாக்கள், 'உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்குள் அவருக்கானக் கூலியைக் கொடுத்துவிடுங்கள்' எனும் நபிகள் பெருமகனாரின் மொழியைக் கேட்டதுண்டா?
@senthilcp
'ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு - செய்தி"#கத்திரிக்கா மட்டுமில்ல, "முருங்கக்காய் முற்றினாலும் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகனும்
@கருப்பு கருணா
அதிமுக எதிர்ப்பு வாக்குகள் ரஜினிக்கு போகும். திமுக எதிர்ப்பு வாக்குகளும் ரஜினிக்குத்தான் போகும். 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் சேர்க்கப்படும் இளம் வாக்காளர்களும் ரஜினியையே ஆதரிப்பார்கள் : குருமூர்த்தி
ஒரு வாக்கும் பாஜகவுக்கு போகாதுன்னு தெரிஞ்சிப்போச்சில்ல...!
@Kozhiyaar
எந்த ஒரு வீரனையும் நடுநிசியில் கூட்டமாய் இருக்கும் நாய்கள் கூட்டம் கொஞ்சம் கலங்கடிக்கத் தான் செய்கிறது!!
'கைப்புள்ள, மனச தளர விட்றாத அப்படியே ஒதுங்குனாப்ல வீடு போய் சேர்ந்தினுவோம்'!!
@emmeskhaleel
தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவது எப்படி @ தமிழிசை
நோட்டா 3, 500 ஓட்டுகளை வாங்குற எடத்துல வெறும் 1,500 ஓட்டுக்களை பிஜேபி வாங்குதில்லே..
அதே கணக்குதான்.
@mekalapugazh
வலதுசாரி எண்ணங்கள் வளர்கிறதாம்..
பெருமையாகப் பேசுகின்றனர் சிலர்.. வளரட்டும் உலகப்போர் என்ன என்பதை எவ்வளவு நாள்தான்..
இந்தத் தலைமுறை திரைப்படஙகளில் மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது.
@Prabakar Kappikulam
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழில் வாசித்த உரையை...
அப்படியே தொகுத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வாசித்தால்..
அதற்குப் பெயர் ஆளுநர் உரையாம்.
@Boopathy Murugesh
நடிகர் சங்க கட்டிடம் கட்ட 2.5 கோடி நிதி கொடுத்தார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்.
ஹீரோவாகும் ஆசை இருந்தா நடிகர் சங்கத்துக்கு பணம் கொடுக்க வேணாம் அண்ணாச்சி,
கடைல வேலை பார்க்குறவன் கால் வலிச்சா உக்கார ஒரு சேர் குடுங்க அவங்க மனசுல ஒரே நாளில் ஹீரோவாகலாம்..
Prabakar Kappikulam
A1 குற்றவாளி வழிகாட்டிய பாதையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.
சட்டமன்றத்தில் ஆய்வு ஆளுநர் புகழாரம்.
@nithya_shre
"கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடரும்" தமிழக ஆளுநர் உரையில் இன்று.
"மீனவர்களை தேடும் பணியை டிசம்பர் 26 , 27 தேதியோடு நிறுத்தி விட்டோம்" மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று.
இந்த மத்திய மாநில அரசுகளை நம்பி போராடும் மீனவர்களை நினைத்தால்...
@கருப்பு கருணா
நேற்றிரவு விழுப்புரத்தில் பேருந்துக்காக காத்திருந்தோம். ரொம்ப நேரத்திற்கு பின் பெங்களூர் செல்லும் புதுச்சேரி அரசு பேருந்து வந்தது. நிற்கக்கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம். பஸ்சில் ஏறி டிரைவர் இருக்கை அருகே பானட்டின்மீது கொஞ்சம் இடம் கிடைத்தது.அந்த குளிருக்கு பானட் சூடு இதமாகத்தான் இருந்தது.
அப்போது ஒரு அரசுப்பேருந்து ஓட்டுநரும் ஏறினார். இடமில்லாததால் படிக்கட்டிலேயே உட்கார்ந்துகொண்டார். வண்டியின் நடத்துனரிடம் பேசிக்கொண்டு வந்தார். மூனு நாளா தொடர்ச்சி டூட்டி பார்த்துட்டு இப்பதான் வீட்டுக்கு போயி குளிச்சிட்டு படுத்தேன். ஆனால் உடனே மேலாளர் புறப்பட்டு வரச்சொல்லிட்டார். வேறு வழியில்லை.போய்க்கிட்டிருக்கேன் என்றார். நீங்க ஸ்டிரைக்ல போகலியான்னு கேட்டேன். நியாயமான ஸ்டிரைக்குதான் சார். நல்லா புரியுது. ஆனா எல்லாருமே போய்ட்டா மக்கள் சிரமப்படுவாங்களே சார். அதான் யூனியன்ல சொல்லிட்டே டூட்டிக்கு போறேன் என்றார். யூனியன்ல அனுமதிச்சிருக்கமாட்டாங்களே..எனக்கேட்டேன். அதெல்லாம் இல்ல சார்...யூனியன்காரங்களும் மனுசங்கதான் சார். ஜனங்க கஷ்டம் அவங்களுக்கும் புரியுது சார்..சரி போங்கன்னு சொல்லிட்டாங்க..என்றார். பின்னர் படிக்கட்டு கம்பியில் கையை நுழைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டே வந்தார்.அவ்வளவு அசதியில் இருந்தார்.
இந்த மாதிரியெல்லாம் தன்னலம் கருதாமல் அரசுக்காக உழைக்கும் இதுபோன்ற ஊழியர்களின் பணம் 7000 கோடியை எடுத்துகொண்டு திருப்பிக்கொடுக்காத அரசுக்கு பெயர் என்னான்னு சொல்றது..ச்சீ..ச்சீ..!
-லாக் ஆஃப்