மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பொங்கல் குழப்பத்துக்கு முடிவுகட்டிய குலேபகாவலி!

பொங்கல் குழப்பத்துக்கு முடிவுகட்டிய குலேபகாவலி!

புதிய படங்களை ரீலீஸ் செய்து கல்லா கட்டுவதில் முக்கியமானது பொங்கல் பண்டிகை விடுமுறை. தீபாவளியைக் காட்டிலும் வசூல் குறைவாக இருப்பினும் முதல் வாரம் படம் நல்லாயிருக்கு எனப் பார்வையாளர்கள் கூறிவிட்டால் இரண்டாவது வாரம் கல்லா நிறைவது உறுதி. முன்னணி நடிகர்கள் நடித்த படம் ஒன்று கட்டாயம் ரீலீஸ் செய்யப்படும். தமிழகத்தில் இயங்கி வரும் 1200 திரைகளில் திரையிட பாஸ்கர் ஒரு ராஸ்கல் (அரவிந்தசாமி), மதுர வீரன் (விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்தது), தானா சேர்ந்த கூட்டம் (சூர்யா), ஸ்கெட்ச் (விக்ரம்) குலேபகாவலி (பிரபுதேவா), மன்னர் வகையறா (விமல்) என ஆறு படங்கள் ஜனவரி 12ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டுவந்தது.

தியேட்டர்கள் முன்னுரிமை கொடுத்து திரையிட விரும்பிய படம் தானா சேர்ந்த கூட்டம். வருமா வராதா என்ற சந்தேகத்தில் ஏரியா வியாபாரம் நடப்பதில் தேக்க நிலை இருந்தது. இதனால் பிற படங்களுக்கும் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்வதில் குழப்பம் நிலவியது.

தானா சேர்ந்த கூட்டம் பஞ்சாயத்து முடிக்கப்பட்டு ரீலீஸ் உறுதி செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 9 ஏரியாவும் வியாபாரம் முடிந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் 400க்கும் அதிகமான தியேட்டர்களில் தானா சேர்ந்த கூட்டம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஞ்சியுள்ள 800 திரையரங்குகளை மற்ற 5 படங்களும் பங்கிட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், விநியோகஸ்தர்களை நியமிப்பதில் தடுமாற்றத்தில் இருந்தன. கடைசி நேரத்தில் குலேபகாவலி ரீலீஸ் தேதி மாறும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முண்னணி விநியோகஸ்தர்களிடம் குலேபகாவலி உரிமையை எந்த நிபந்தனையும் இன்றி தயாரிப்பாளர் வழங்கியிருக்கிறார்.

தியேட்டர் கிடைத்தால் போதும் என்று புத்திசாலிதனமாகத் தயாரிப்புத் தரப்பு எடுத்த முடிவுக்கு உடனடிப் பலன் கிடைத்தது. 200க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடனடியாக ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டன. இதனால் சென்னை தவிர்த்துப் பிற சிறு நகரங்களில் ஸ்கெட்ச் படத்தைத் திரையிட தியேட்டர்கள் இல்லை. குலேபகாவலி தயாரிப்பாளர் கையாண்ட அதிரடி முடிவால் மதுர வீரன், பாஸ்கர்ஒரு ராஸ்கல் பொங்கல் போட்டியிலிருந்து விலகிவிட, மன்னர் வகையறா தணிக்கை ஆகாததால் அதுவும் ஆட்டத்தில் இல்லை.

பிற படங்களை பொங்கல் போட்டியிலிருந்து அப்புறப்படுத்திய குலேபகாவலி, பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, யோகி பாபு நடித்துள்ள காமெடி படம். கதை திரைக்கதை வசனம் எழுதி கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோ தயாரித்துள்ளது. கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டை பெற்று வெற்றிபெற்ற அறம் படத்தைத் தயாரித்த நிறுவனம் கே.ஜே.ஆர். ஸ்டுடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018