நாட்டா நுழைவுத் தேர்வு : தேதி அறிவிப்பு!

அகில இந்திய அளவில் பிஆர்க் படிப்புக்கு நடத்தப்படும் நாட்டா ( National Aptitude Test in Architecture) நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலை உட்பட அனைத்துப் பல்கலைகளின் கல்லூரிகளிலும், பிஇ, பிடெக்., படிப்பைப் போல் பிஆர்க்., படிப்பில் சேர மாணவர்கள் நாட்டா நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், பிஆர்க், சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவுத் தேர்வை தேசிய 'ஆர்கிடெக்ட்' கவுன்சில் நேற்று அறிவித்தது. ஏப்ரல் 29ஆம் தேதி நாடு முழுவதும் நாட்டா தேர்வு நடக்கும். ஜூன் 1ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். ஜனவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களை https://learning.tcsionhub.in/test/nata-2018 என்ற இணையதள இணைப்பில், தெரிந்துகொள்ளலாம்.