மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கார்த்தி சிதம்பரம் வழக்கு ஒத்திவைப்பு!

கார்த்தி சிதம்பரம் வழக்கு ஒத்திவைப்பு!

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் கார்த்தி ப.சிதம்பரம். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் ஜனவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டைப் பெற்றது. இதற்காக அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திரானி முகர்ஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவில்லை. இதனால், அவரைத் தேடப்படும் நபராக அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். இதையடுத்து வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் கார்த்தி சிதம்பரம். அப்போது, அவருக்கு அனுமதி கிடைத்தது.

தற்போது ஜனவரி 11ஆம் தேதி வழக்கில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் தனது தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினார் கார்த்தி சிதம்பரம். ஜனவரி 10ஆம் தேதி முதல்

20ஆம் தேதி வரை வெளிநாடு செல்லவிருப்பதாக, அவர் கூறியிருந்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று (ஜனவரி 8) நடைபெற்றது. விசாரணையின் முடிவில், வரும் ஜனவரி 16ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018