மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பிரச்சார ஆயுதமான உடைகள்!

பிரச்சார ஆயுதமான உடைகள்!

சர்வதேச விருது வழங்கும் விழாவுக்காகவே பிரபல நடிகைகள் பிரத்யேகமாக உடைகளை வடிவமைத்து சிவப்பு கம்பள வரவேற்பில் கவனம் ஈர்ப்பர். விருதுகளுக்கு நிகராக உடைகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களும் வரவேற்பும் கிளம்பும். ஆனால் நேற்று (ஜனவரி 7) அமெரிக்காவில் நடைபெற்ற 75ஆவது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் தங்கள் உடைகள் மூலம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்ற துறைகளைப் போலவே திரைத்துறையிலும் நடக்கின்றன. சமீபகாலமாக பல்வேறு புகார்களை ஹாலிவுட் சந்தித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது பல முன்னணி நடிகைகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மீ டூ ஹேஸ்டேக் பிரபலமானது. அதை தொடர்ந்து திரைப்பட, தொலைக்காட்சி, நாடக நடிகைகள் 300 பேர் இணைந்து டைம்ஸ் அப் என்ற இயக்கத்தையும் தொடங்கினர். இந்த இயக்கத்தினர் நேற்று கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்வை முன்னிட்டு கருப்பு உடை அணிந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள் என்று கூறியிருந்தனர். இதனால் பல்வேறு பிரபல நடிகை, நடிகர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.

ஹாலிவுட் தொடர் மற்றும் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு உடை அணிந்த புகைப்படத்தை பதிவேற்றி, “இன்று ஒரு நாள், நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் கருப்பு உடை அணிந்து டைம்ஸ் அப்-க்கு ஆதரவு தாருங்கள்” என பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு விருது வழங்கும் விழாவில் பிரியங்கா அணிந்த உடை மிகுந்த வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

திங்கள் 8 ஜன 2018