மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

எண்ணெய் கப்பல் விபத்து: சுற்றுச்சூழல் பாதிப்பு!

எண்ணெய் கப்பல் விபத்து: சுற்றுச்சூழல் பாதிப்பு!

சீனா கடல் பகுதியில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதியதில் சேதமடைந்த எண்ணெய் கப்பல் வெடித்துச் சிதறும் நிலை உள்ளது. இதனால் அங்குப் பெருமளவு சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஈரானிய எண்ணெய்க் கப்பல் ஒன்று சீனாவின்(ஹாங்காங்) சரக்குக் கப்பலுடன் மோதியதில் நடுக்கடலில் இரண்டு நாட்களாகத் தீப்பிடித்து எரிகிறது. ஈரானில் இருந்து தென்கொரியாவுக்கு கடந்த மாதம்(டிசம்பர்)16ஆம் தேதியன்று இந்தக் கப்பல் கிளம்பியது.

சென்ற சனிக்கிழமை(ஜனவரி 6) அந்தக் கப்பல் சீன சரக்குக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் 1,36,000 டன்கள் அளவிற்கு எண்ணெய்யும், ஹாங்காங் கப்பலில் தானியங்களும் இருந்தன. சீனாவில் ஷாங்காய் கடற்கரையில் இருந்து 160 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தினால் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிகிறது. இதனால் கடற்பரப்பில் பெருமளவில் எண்ணெய் பரவிக் கொண்டிருக்கிறது. கப்பல் தீ பிடித்து எரிந்து கொண்டிருப்பதால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காணப்படுகிறது.

இதனிடையே எண்ணெய் கப்பல் எந்நேரத்திலும் வெடித்துச் சிதறும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெடித்துச் சிதறினால் மிகப் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும், சேதமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

அந்தக் கப்பலில் இருந்த 30 ஈரானியர்கள் மற்றும் 2 வங்கதேசத்தவர்களின் நிலை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. ஹாங்காங் கப்பலில் இருந்த சீனர்கள் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018