மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பிரதியுமான் வழக்கு : மாணவன் ஜாமீன் மனு தள்ளுபடி!

பிரதியுமான் வழக்கு : மாணவன் ஜாமீன் மனு தள்ளுபடி!

சிறுவன் பிரதியுமான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 16 வயது மாணவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து குருகிராம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் 2016 செப்டம்பர் 8 அன்று பள்ளி கழிப்பறையில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் பள்ளி பேருந்து ஓட்டுநர் அசோக்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையின் போது முக்கிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் பிரதியுமானை கொலை செய்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

தேர்வு மற்றும் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பை நிறுத்துவதற்காகச் சிறுவனை கொலை செய்ததாக அந்த மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் ஓட்டுநர் அசோக்குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

பிரதியுமானின் தந்தை பருன் தாக்கூர் 16 வயது சிறுவனை வயது வந்தோராகக் கருதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதை ஏற்ற நீதிமன்றம் 16 வயது சிறுவனை வயது வந்தோராகக் கருதி விசாரிக்க உத்தரவிட்டது. அப்போது சிறுவன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால் 11-ம் வகுப்பு மாணவன், சிறார் கூர்நோக்கும் இல்லத்தில் தனது 21-ம் வயது வரை இருக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அவரைச் சிறைக்கு அல்லது ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018