மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கோயம்பேடு: பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம்!

கோயம்பேடு: பொங்கல் சிறப்பு விற்பனை தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் அதிகமான கரும்புகள் விற்பனைக்காக வந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் 10 நாள் சிறப்பு விற்பனை நடைபெறுவது வழக்கம். அவ்வாறே இந்த ஆண்டுக்கான சிறப்புச் சந்தை ஜனவரி 7ஆம் தேதி (நேற்று) தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை வழிபாட்டுக்குத் தேவையான கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, மண் பானை, வாழை இலை உள்ளிட்ட சாமான்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு மலர் சந்தைக்குப் பின்புறம் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு விற்பனை ஜனவரி 16ஆம் தேதி வரையில் நீடிக்கும். பொங்கலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன. 15 எண்ணிக்கைக் கொண்ட கரும்புக் கட்டு ஒன்றின் விலை ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 8 ஜன 2018