மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

முதல்வரைச் சந்திப்பேன் !

முதல்வரைச் சந்திப்பேன் !

முதல்வரைச் சந்திப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை, தேவைப்பட்டால் துறை அமைச்சர்களையும் சந்திப்பேன் என்று ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 3 அன்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், தினகரன் சட்டபேரவைக்கு முதன் முறையாக வருகிறார் அவரது பேச்சுக்கு யாரும் குறுக்கிட்டு தடை செய்யக்கூடாது. அவரைப்பார்த்து சிரிக்க கூடாது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதிவியேற்ற டிடிவி தினகரன் முதல் முறையாக இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார்.

இன்று (ஜனவரி 8) சட்டப்பேரவை முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் , சட்டமன்ற உறுப்பினராக முதல்வரை சந்திப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார். தேவைப்பட்டால் பல்வேறு துறை அமைச்சர்களையும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.அவர் பேசும்போது "முதல்வரை சந்திப்பதில் என்ன இருக்கிறது, அவர் எங்கள் பங்காளி தானே, முன்னாள் நண்பர்தானே என்றார்.

மேலும் அவர், தற்போது மக்கள் விரோத அரசு நடைபெறுகிறது அதை வீழ்த்துவதற்காக யார் போராடினாலும், அவர்களை நாங்களும் எங்களை அவர்களும் ஆதரிப்பது என்பது இயல்புதானே என்ற தினகரன் இதை திமுகவுடன் கூட்டணி என்று சொல்லமுடியாது என்றும் விளக்கம் அளித்தார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018