மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

'ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ பாடலாகிறது!

'ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ பாடலாகிறது!

ரஜினி, தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது கூறிய ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்ற வசனம் அனைத்து தளங்களிலும் கிண்டலுக்குள்ளாக்கப்பட்ட ஒன்று. ட்விட்டரில் டிரெண்டிங் செய்து பிரபலப்படுத்தப்பட்ட இந்த வரியைத் தங்களது ‘தாதா 87’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங்குக்காகப் பயன்படுத்த முடிவெடுத்து ‘ஒரு நிமிஷம் தலை சுத்தும்’ என்ற பாடலை உருவாக்குகின்றனர் படக் குழுவினர்.

எந்திரன் திரைப்படத்தில் ரோபோக்களின் கூட்டத்தில் ஒளிந்திருக்கும் வசீகரனைப் பிடிக்க, சிட்டி செய்த சாமார்த்தியமான வேலை அனைத்து ரோபோட்களையும் தலையைச் சுற்றச் செய்தது. ‘என்ன சனா தலை சுத்துதா? இப்ப சுத்தும் பாரு’ என்று சனாவிடம் சிட்டி பேசியபோதே பிரபலமான இந்த வரி, ரசிகர்கள் சந்திப்பின்போது ரஜினியால் மீட்டெடுக்கப்பட்டது. இதனால் இந்த வரியைத் தங்களது பாடலில் பயன்படுத்தப் படக் குழு முடிவெடுத்திருக்கிறது.

‘கலை சினிமாஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் ‘தாதா 87’.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 8 ஜன 2018