மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஓரினச் சேர்க்கை தடை சட்டம் மறுபரிசீலனை!

ஓரினச் சேர்க்கை தடை சட்டம் மறுபரிசீலனை!

ஓரினச் சேர்க்கையைத் தடை செய்யும் சட்டப் பிரிவு 377-ஐ மறுபரிசீலனை செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஓரினச் சேர்க்கையைத் தடை செய்த நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவில், ஓரினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவை எதிர்த்து ‘நாஸ் நிறுவனம்’ தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம், வயது வந்த இருவர் பாலுறவில் ஈடுபடும் விருப்புரிமையை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாதென்று அறிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டப் பிரிவு 377-ன் படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்தான் என்று கடந்த 2013ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் 2014-ல் வழக்கைப் பேரமர்வுக்கு மாற்றியது..

பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஐந்து பேர், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், இயற்கையாக எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் உறவுமுறை விருப்பத்தால், நாங்கள் காவல்துறைக்கு பயந்தே வாழவேண்டிய நிலையுள்ளது. அதனால் ஓரினச் சேர்க்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனு பல நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் இன்று (ஜனவரி 8) .தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம் கான்வில்கர் மற்றும் டி.எம். சந்திரசூத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2013-ல் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சட்டம் தற்காலத்திற்கு ஏற்கத்தக்கதுதானா என்று வினவிய நீதிபதிகள் ஒரு மனிதனின் சுதந்திரம் மற்றும் உரிமையில் சட்டம் எல்லை கடந்து செயல்பட கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு ஓரினச் சேர்க்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் கூறியுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018