மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ரேணிகுண்டா - பெங்களூரு விமான சேவை தொடக்கம்!

ரேணிகுண்டா - பெங்களூரு விமான சேவை தொடக்கம்!

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு விமான சேவையை மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு நேற்று (ஜனவரி 7) தொடங்கி வைத்தார்.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் பெங்களூரு, ஐதராபாத் நகரங்களுக்கான விமான சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, "ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களிலிருந்து பயணிகள் அதிக அளவில் விமானம் மூலம் பயணம் செய்துள்ளனர். விரைவில் நாடு முழுவதும் விமான போக்குவரத்து மேம்படுத்தப்படும். ரேணிகுண்டா விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 2015ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச விமான நிலையமாக செயல்பட்டுவருகிறது. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காகச் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். வியாபாரம், சுற்றுலா, தொழில் துறை தொடர்பான நடவடிக்கைகளுக்கு இனிமேல் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யலாம். ஆந்திராவில் தற்போது செயல்படுத்தப்படும் ஜென்மபூமி மாவூரு திட்டம் நன்றாக உள்ளது. விமான சேவையில் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விமான அபிவிருத்தி திட்டத்துக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ரேணிகுண்டாவிலிருந்து கோவைக்குத் தனியார் விமானச் சேவை தொடங்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டுவருகின்றன" என்று கூறியுள்ளார்.

தற்போது ரேணிகுண்டாவிலிருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் காலை 10.50 மணி, மாலை 5.20 மணி, இரவு 8.55 மணியளவில் விமானங்கள் இயக்கப்படும். விமானக் கட்டணமாக ஐதராபாத்துக்கு ரூ.3 ஆயிரமும், பெங்களூருக்கு ரூ.1500ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விழா முடிவில் ரேணிகுண்டாவிலிருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்பட்ட விமானம் ஒன்றில் முதல் பயணியாக அமைச்சர் அசோக் கஜபதி ராஜு ஏறி, ஐதராபாத் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018