மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

சசிகலா மீது புகார்: தகவலளிக்க தயார்!

சசிகலா மீது புகார்: தகவலளிக்க தயார்!

சசிகலா மீது குற்றச்சாட்டு சுமத்தியது யாரென்ற விவரங்களை அளிக்க தயாராக உள்ளதாக ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இன்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இதுதொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் பெங்களுரு சிறையிலுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனில் விசாரணை ஆணையத்தின் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சம்மனின் அசல் பிரதி கிடைத்த பிறகு ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என்று சசிகலா தரப்பில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதாவின் நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி முதல் சசிகலா சிறையில் மௌன விரதத்தில் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இது தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முன்பு சசிகலாவிற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார். அவர், "விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், யார் குற்றச்சாட்டு தெரிவித்தது என்ற விவரத்தைக் கொடுக்க வேண்டும். விசாரணை ஆணையம் அளிக்கும் விவரத்தின்படி 15 நாட்களில் பதிலளிக்க தயாராக உள்ளோம்" என தெரிவித்திருந்தார்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 8 ஜன 2018