மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிர்ச்சிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உளுந்து நல்ல உணவு. அதுமட்டுமில்லாமல், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமாக இருக்கிறது உளுந்து. அத்துடன், குழந்தை பெற்ற பெண்ணுக்குப் பால் சுரப்பை அதிகமாக்குகிறது. தினமும் நாம் உளுந்தை உணவில் சேர்த்தால் மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்னைகளெல்லாம் தீரும்.

வகைவகையாக வடைகள் செய்திருக்கலாம். மொறுமொறுவென சாப்பிட்டிருக்கலாம். இனிப்பான வடை சாப்பிட்டதுண்டா... வாருங்கள் செட்டிநாடு ஸ்பெஷல் கல்கண்டு வடை செய்யலாம்.

தேவையான பொருள்கள் - 15 வடைகள் செய்ய

உளுந்து - 100 கிராம்

பச்சரிசி - கால் கோப்பை

கல்கண்டு - முக்கால் கோப்பை

உப்பு - ஒரு சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

கல்கண்டைத் தட்டி தூளாக்கிக் கொள்ளவும். உளுந்தையும் அரிசியையும் நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஆட்டுரலில் போட்டு அரைக்கவும், சிறிதுகூட தண்ணீர் சேர்க்கக் கூடாது. தண்ணீருக்கு பதிலாக பொடித்த கல்கண்டை இடை இடையே சேர்த்து அரைக்கவும். நல்ல பந்து போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.

மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவுடவும். கல்கண்டு வடை தயார்.

கீர்த்தனா சிந்தனைகள்

அதாவதுங்க...

திங்கட்கிழமை காலையும்!

தி.நகர் ரங்கநாதன் சாலையும்!

எப்பவுமே கூச்சல் கொழப்பமா தான் இருக்கும்!

- இதுவும் கடந்துபோகும்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018