மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பாகமதியாக மிரட்டும் அனுஷ்கா

பாகமதியாக மிரட்டும் அனுஷ்கா

பாகுபலி படத்திற்குப் பிறகு அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாகமதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

அருந்ததி படத்திற்குப் பிறகு அதே ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் பாகமதி படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தின் டீசரில் அருந்ததி படத்தின் சாயல் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் சந்திரமுகி படத்தின் சாயலும் இருக்கிறது.

ஊருக்கு நல்லது செய்ய விரும்பும் அனுஷ்கா மீது பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைக்கின்றனர். அந்தச் சிறையிலிருந்து அவரைத் தனியாக அழைத்துச் சென்று பழைய அரண்மனையில் அடைத்து விடுகின்றனர். அந்த அரண்மனையில் முன்பு வாழ்ந்த பாகமதியின் ஆத்மா அனுஷ்காவின் உடலில் புகுந்து தீமை செய்பவர்களை பழிவாங்கும் விதத்தினை ஹாரர் த்ரில்லர் பாணியில் சொல்லியிருப்பார்கள் என ட்ரெய்லரைப் பார்க்கையில் கருத முடிகிறது.

இதில் பாகமதியாக மாறி அனுஷ்கா பேசும், “இங்க எவன் வேணும்னாலும் வரலாம். எப்ப வேணும்னாலும் போகலாம்கிறதுக்கு இது என்ன பரதேசி மடமா... பாகமதி இடம்... என் கணக்க முடிக்காம ஒருத்தரையும் விட மாட்டேன்” என்கிற வசனம் சந்திரமுகி ஜோதிகாவை நினைவுப்படுத்தினாலும் அனுஷ்காவுக்கு மாஸாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தை ஜி.அசோக் இயக்கி வருகிறார். முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இதற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்திருக்கும் பாகமதி படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினக் கொண்டாட்டமாக வெளிவர இருக்கிறது.

பாகமதி ட்ரெய்லர்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 8 ஜன 2018