மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கோரிக்கையைப் பொறுத்து பேசுவதற்கு அனுமதி!

கோரிக்கையைப் பொறுத்து பேசுவதற்கு அனுமதி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. திமுக, காங்கிரஸ் போன்றவை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. கூட்டம் முடிவடைந்த பின்னர் சபாநாயகர் தனபால் அறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான அலுவல ஆய்வுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, எவ்வாறு நடத்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தனபால்,“சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 9ஆம் தேதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள், 2017- ஆண்டு ஓகி புயலில் மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அது முடிந்தவுடன் அன்றே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்குகிறது.

10 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடரும். 11ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவதத்தைத் தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். 12ஆம் தேதி காலை 2017-18-ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். அன்றே, ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலளிப்பார்.

2017ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கை குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைக்கான அறிக்கை அதன் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். மானிய கோரிக்கைகள் சட்டமுன் வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் விவாதமின்றி நிறைவேற்றுதல். சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும் நடைபெறும். வேறு அலுவல்கள் இருந்தால் அதுவும் 12ஆம் தேதி நிறைவேற்றப்படும்” என்று அறிவித்தார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018