மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

சட்டப்பேரவையில் தினகரன்

சட்டப்பேரவையில் தினகரன்

எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பின் முதல்முறையாக இன்று ( ஜனவரி 8) தினகரன் சட்டமன்றத்திற்கு வருகை தந்தார். அவருடன் சட்டப்பேரவை வளாகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வருகை தந்தனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவைக் காவலர்களிடம் தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நான்காம் எண் நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்த தினகரனுக்கு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சட்டப்பேரவைக்கு சென்ற தினகரனுக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துக் கூறி இருக்கையில் அமரவைத்தனர். தினகரனுக்கு எதிர்க்கட்சி வரிசையில் 148ஆம் எண் கொண்ட இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இருக்கையில் கடந்த 2006ஆம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.எல்.வான விஜயகாந்த் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரை தொடங்கியதுமே எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. - காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் எதிர்க்கட்சி வரிசையில் டி.டி.வி.தினகரன் மட்டும் தனிமையில் அமர்ந்து இருந்தார்.

பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "விஷன் 2023 என்ற பெயரில் நிலைக்கத்தக்க வளர்ச்சியை செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அரசு எந்திரமே செயல்படவில்லை என்ற நிலையில், 2023க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார்.

ஆளுநர் உரையில் டெல்டா பகுதி விவசாயிகளின் பாதுகாப்பு குறித்தும், மீத்தேன் திட்டத்திற்குத் தடை விதிப்பது குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை. கூடங்குளம் அணுஉலைகள் பாதுகாப்பாக இல்லாத நிலையில், புதிய அணு உலைகள் ஏன் என்ற கேள்வியை எழுப்பிய அவர், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், ஓகி புயல், மீனவர்கள் காணாமல் போனது என பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆளுநர் உரையில் எவ்வித அறிவிப்பும் இல்லை" என்றும் குற்றம் சாட்டினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018