மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஓவியா அடுத்த பட அறிவிப்பு!

ஓவியா அடுத்த பட அறிவிப்பு!

ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்துவரும் ஓவியா பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனிதா உதீப் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஆன்சன் பால் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘சோலோ’, ‘அடு 2’ ஆகிய படங்களில் நடித்திருப்பதோடு, சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் ஆன்சன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இது குறித்து ஆன்சன், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், “ரொமாண்டிக் காமெடி படமாக உருவாக இருப்பதால் இந்தப் படம் எனக்கு தமிழில் நல்ல தொடக்கத்தைத் தரும் என நம்புகிறேன். இந்தப் படத்தில் நடிக்க நானும் ஓவியாவும் திருச்சூரில் பயிற்சி மேற்கொண்டுள்ளோம்” என்றார்.

இந்தப் படத்தின் டைட்டிலை பிப்ரவரியில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்சன், ஓவியா இருவரும் திருச்சூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 8 ஜன 2018