மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

அதிகாரிகள் சம்பள விவரம்: நாடாளுமன்றக் குழு அதிருப்தி!

அதிகாரிகள் சம்பள விவரம்: நாடாளுமன்றக் குழு அதிருப்தி!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் சம்பளம், சலுகைகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற விவரங்களை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு, நாடாளுமன்ற ஆய்வுக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் (இந்திய வனத்துறை சேவை) மற்றும் பிற அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்களுக்கான செலவுகள் குறித்து, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். இக்குழுவினர், ‘மதிப்பீடு மற்றும் இந்திய அரசுப் பணியில் உள்ள அதிகாரிகளின் செயல்திறன் மறுமதிப்பீடு’ என்ற தலைப்பில் சமீபத்தில் மக்களவையில் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், “நாட்டின் வளர்ச்சிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் பிற உயரதிகாரிகளின் பங்களிப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்கு சரியான நடைமுறை எதுவும் இல்லை. அதிகாரிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளையும் அரசு எடுக்கவில்லை. அரசு சாரா அமைப்புகள் கூட இதுபோன்ற ஆய்வை நடத்தவில்லை. எனவே, நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய செயல்திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், பிற உயரதிகாரிகளின் சம்பளம், சலுகைகள், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு எவ்வளவு செலவாகிறது, அவர்களுக்கான அலுவலக கட்டமைப்பு, நாற்காலி, மேசைகளுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற விவரங்களும் அளிக்கப்படவில்லை. மத்தியப் பணியாளர் துறையாலும் அந்த விவரங்களைத் தர முடியவில்லை. எனவே, அவர்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்ற முழு விவரங்களையும் ஆண்டுவாரியாக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆய்வில் ஐஐஎம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018