மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

தமிழருக்கு கோல்டன் குளோப் விருது!

தமிழருக்கு கோல்டன் குளோப் விருது!

அமெரிக்காவில் சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான கோல்டன் குளோப் விருது, தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அஜீஸ் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அதை இயக்கியவர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் கோல்டன் குளோப் விருது வழங்கப்படுகிறது. 75ஆவது ஆண்டு கோல்டன் குளோப் விருது லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள பேவெர்லி ஹில்டன் என்ற பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் ஹாலிவுட் பிரபலங்களும், தொலைக்காட்சி நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இதில் சிறந்த திரைப்படத்துக்கான விருது லேடி பேர்ட் என்ற படத்துக்கும், சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது கோகோவுக்கும் வழங்கப்பட்டன. தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட நடிகர் அஜீஸ் அன்சாரிக்கு, சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

நடிகர் அஜீஸ் அன்சாரி, மாஸ்டர் ஆப் நன் என்ற தொலைக்காட்சித் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018