மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கடும் குளிர் : 70 பேர் பலி!

கடும் குளிர் : 70 பேர் பலி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்பொழிவு இன்னும் ஒரு வாரம் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பல்வேறு ரயில் சேவைகளும், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்குப் பனிப்பொழிவு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தங்குவதற்கு வீடுகள் இல்லாமல் சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் குளிருக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தில்(லக்னோ 28, உபி கிழக்கு 22, அலகாபாத் 11, பெய்ரலி 3, பாராபங்கி 2, ஃபைசாபாத் 2, அம்பேத்கர் நகர் 1, ரே பெய்ரலி 1) மட்டும் கடந்த 48 மணி நேரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர். மற்ற மாநிலங்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த மரணங்களைத் தடுக்க உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் அரசு சார்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீ மூட்டிக் குளிர் காய விறகுகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தேவையான மக்களுக்கு போர்வைகளை விநியோகிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. போர்வைகளுக்காக 2.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018