மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

நீட் : தாலியைக் கழட்டிய மருத்துவர்கள்!

நீட் : தாலியைக் கழட்டிய மருத்துவர்கள்!

மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வில் தங்கம் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பெண் மருத்துவர்கள் தாலியை கழற்றி வைத்துவிட்டுத் தேர்வு எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பிலும் டிப்ளமோ மேற்படிப்பிலும் 153 மருத்துவக் கல்லூரிகளில் 35,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 8,000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2018-19ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவர்கள் 20,000 பேர் உட்பட நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 128 நகரங்களில் நேற்று (ஜனவரி 7) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மூன்றரை மணி நேரம் நீட் தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் செல்பேசி, புளூடூத், நோட்புக், பேனா, கைப்பை உள்ளிட்ட எதையும் எடுத்து வரக்கூடாது. கம்மல், வாட்ச், பிரேஸ்லெட், பெல்ட் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளைத் தேசிய தேர்வுகள் வாரியம் விதித்திருந்தது.

இந்நிலையில், சில இடங்களில் தாலி அணிந்து வந்த பெண் மருத்துவர்களுக்குத் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால்,தாலியைக் கழற்றி வைத்துவிட்டு அவர்கள் தேர்வு எழுதச் சென்றனர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் கோபிநாத், “மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு 2017ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில், தாலியுடன் வந்த பெண் மருத்துவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் தாலியை கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதினர். இதுகுறித்து தேசிய தேர்வுகள் வாரியத்திடம் புகார் செய்தபோது, அடுத்த முறை இதுபோல் நடக்காது என சமாதானம் செய்தனர். ஆனால், இந்த ஆண்டு சென்னை, திருச்சி, சேலம் நகரங்களில் சில தேர்வு மையங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018