மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார்

விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவருமான மருத்துவர் சிவக்குமார் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுக் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுவருகிறது. ஜெ மரணத்தில் சந்தேகம் உள்ளதென பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பினர்.

இதற்கிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், சசிகலா, தினகரன், கிருஷ்ணப் பிரியா ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. தினகரன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சிகிச்சை வீடியோ அடங்கிய பென்டிரைவை ஆணையத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. தன் மீது புகார் கூறியவர்கள் யார் என்று கூறினால் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிப்பது குறித்து முடிவு செய்வதாக சசிகலா சார்பில் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018