மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பாலிவுட் மெகா பட்ஜெட்டில் விக்ரம்

பாலிவுட் மெகா பட்ஜெட்டில் விக்ரம்

தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்துவரும் விக்ரம் அடுத்ததாக மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ஸ்கெட்ச் படமானது பொங்கல் தினக் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கௌதம் மேனனுடன் விக்ரம் இணைந்திருக்கும் துருவ நட்சத்திரமும் தயாராகிவருகிறது. தற்போது நெல்லையில் சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் சாமி ஸ்கொயரின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவருகிறார். இந்நிலையில் மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம்.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இந்த இந்திப் படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘என்னு நிண்டே மொய்தீன்’ மூலம் கவனம் பெற்ற மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கவுள்ளார். இது குறித்தான அறிவிப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹிஸ்டாரிக்கல் பீரியட் படமாக உருவாகவிருக்கும் இதனை ‘யுனைடெட் ஃபிலிம் கிங்டம்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 8 ஜன 2018