மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பாரில் தீ விபத்து: 5 பேர் பலி!

பாரில் தீ விபத்து: 5 பேர் பலி!

பெங்களூருவில் இன்று (ஜனவரி 8) அதிகாலை மதுபான கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கலசிபால்யா பகுதியில் வணிக வளாகம், மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. பரபரப்பான இப்பகுதியில் உள்ள கும்பார சங்க கட்டிடத்தில் உணவகத்துடன் கூடிய ‘கைலாஷ் பார்’ என்ற மதுபான கடையும் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு பார் மூடப்பட்ட பிறகு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் உள்ளேயே உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென்று அனைத்துப் பக்கமும் பரவியதால் தூக்கத்திலிருந்த ஊழியர்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

அப்பகுதியில் சென்றவர்கள் இது குறித்து மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கீர்த்தி என்ற பெண் உட்பட சுவாமி, பிரசாத், மகேஷ் ,மஞ்சுநாத் ஆகிய 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் கர்நாடகத்தின் தும்கூர் மற்றும் மாண்டியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். என்பது தெரியவந்துள்ளது.

கலசிபால்யா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 8 ஜன 2018