தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு!

2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 8.3 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 8.3 சதவிகித உயர்வுடன் 216.99 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 200.36 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. மதிப்பு அடிப்படையில் 2017ல் ரூ.4,269.47 கோடிக்குத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டில் ரூ.4,016.26 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.