மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கைவிடப்பட்டதா சாய்னா பயோ- பிக்?

கைவிடப்பட்டதா சாய்னா பயோ- பிக்?

ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஹசினா பார்க்கர். நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கையின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அப்படம் உருவாகியிருந்தது. ஆனால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் ஷ்ரத்தா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கான பயிற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தார். தற்போது அந்த படமும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

அமொல் குப்தா இயக்கும் இந்த படத்திற்காக ஷ்ரத்தாவும் சாய்னாவும் பல முறை சந்தித்தனர். “சாய்னாவோடு இணைந்து ஷ்ரத்தா கடுமையான பேட்மிண்டன் பயிற்சி பெற்றார். படத்தின் பணிகள் முழு வேகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் சில பிரச்சினைகள் காரணமாக படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் டிஎன்ஏ-வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு தரப்பினர், “இந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதா அல்லது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீண்டும் தொடங்குமா என்பது யாருக்கும் தெரியாது” என்று கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக இயக்குநர் அமொல் குப்தாவிடம் கருத்து கேட்க முயன்றும் அவரிடம் இருந்து பதில்பெறமுடியவில்லை என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 8 ஜன 2018