லாவண்யா பிடித்த கிளாமர் ரூட்!


பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்திலே வலம் வந்த லாவண்யா திரிபாதி தற்போது கிளாமர் வேடம் ஏற்று நடிக்கவுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான பிரம்மன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லாவண்யா. இவர் கதாநாயகியாக நடித்து சி.வி.குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மாயவன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வி.வி.விநாயக் இயக்கத்தில் சாய் தரம் தேஜ்ஜுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் கிளாமர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“லாவண்யா கிளாமர் வேடங்களில் நடிக்கப் பலமுறை விருப்பம் தெரிவித்திருந்தும் சரியான கதை அமையவில்லை. இந்த படத்தில் பணக்காரர் ஒருவரின் மகளாக நடிக்கும் லாவண்யாவுக்கு அதற்கான இடம் உள்ளது. தனது தோற்றம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக அதிக நேரம் செலவிடுகிறார். முதன்முறையாக உடை வடிவமைப்பில் அவரது ஆளுமை வெளிப்படும் படமாக இது இருக்கும்” என படக் குழுவுக்கு நெருக்கமானவர்கள் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.