மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

உலகப் பொருளாதாரத்தை மிஞ்சிய கடன் சுமை!

உலகப் பொருளாதாரத்தை மிஞ்சிய கடன் சுமை!

சர்வதேச கடன் சுமையானது உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட இதுபற்றிய ஆய்வில், 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உலகின் கடன் சுமை வரலாற்றிலேயே அதிகபட்சமாக 233 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது 2016ஆம் ஆண்டின் இதே காலகட்ட கடன் சுமையை விட 16 லட்சம் கோடி டாலர் அதிகமாகும். கனடா, ஃபிரான்ஸ், ஹாங்காங், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தனியார் (நிதியல்லாத) நிறுவனங்களின் கடன் சுமை இதுவரையில்லாத அளவுக்கு 68 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அரசுகளின் கடன் சுமை 63 லட்சம் கோடி டாலராகவும், நிதி நிறுவனங்களின் கடன் சுமை 58 லட்சம் கோடி டாலராகவும் உயர்ந்துள்ளது. அதிகரித்துவரும் இந்தக் கடன் சுமையானது சர்வதேச வங்கிகள் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்துவதற்குத் தடையாக அமைந்துள்ளதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டர்நேஷனல் ஃபைனான்ஸ் நிறுவனம் கூறுகிறது. சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் இவ்வாறு கடன் சுமை உயர்ந்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018