மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கட்சிகளுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை!

கட்சிகளுக்கு நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை!

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயற்சிகள் நடந்துவருவதாகத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

இந்தியாவிலுள்ள தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் அனைத்தும் நன்கொடைகள் பெறுகின்றன. கட்சிகளின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள், இவற்றினாலேயே சீராக நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவ்வாறு பெறப்படும் நிதி எவ்வளவு என்பது போன்ற தகவல்கள் வெளியாவதில்லை. இதனால், கட்சிகளுக்கு நிதி வழங்கும் விவகாரம் குறித்து அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதற்கு முடிவுகட்ட, நன்கொடைகளைப் பெறுவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ”கட்சி உறுப்பினர்கள், நலம் விரும்பிகள், சிறிய மற்றும் பெரிய தொழிலதிபர்கள் நன்கொடை அளிக்கின்றனர். இவை பணமாகப் பெறப்படுகிறது; பணமாகவே செலவும் செய்யப்படுகிறது. அந்தப் பணம் எங்கிருந்து, யாரால், எப்படிப் பெறப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவதில்லை. இந்த முறை முழுக்கவே வெளிப்படைத்தன்மையற்று உள்ளது” என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நிதி பத்திரங்களை குறிப்பிட்ட வங்கிகளில் வழங்குவது இதற்குத் தீர்வாக இருக்கும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

காசோலை, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் வெளிப்படையானது என்றாலும், தேர்தல் நிதி பத்திரங்கள் அதைவிட மேலானது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, இந்தியாவிலுள்ள அனைத்து தரப்பினரின் கருத்தைப் பெற அரசு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

திங்கள் 8 ஜன 2018