மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

புஜாராவின் நம்பிக்கை பலிக்குமா?

புஜாராவின் நம்பிக்கை பலிக்குமா?

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சித்தேஸ்வர் புஜாரா இந்திய அணி 350 ரன்களை சேஸ் செய்து வெற்றிபெறும் அளவிற்குத் திறனுடையது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாட உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் தொடர்ச்சியாக களமிறங்கிய இந்திய அணி 209 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 65 ரன்களுக்கு 2 ரன்களைச் சேர்த்துள்ளது. நேற்று மழை குறுக்கிட்டதால் 3ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை புஜாரா வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “நாங்கள் எதிரணியைக் குறைந்த ரன்களுக்கு வீழ்த்தவே முயற்சி செய்கிறோம். ஆனால் ஆடுகளத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும் பொழுது 350 ரன்கள் இலக்கு இருந்தாலும் அதனை சேஸ் செய்யும் திறமை எங்களிடம் உள்ளது. முதல் இன்னிங்ஸில் நமது அணியின் முன்னணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை. அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

திங்கள் 8 ஜன 2018