மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

சட்டமன்றக் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், நேற்று காலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும், மாலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் நடைபெற்றது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை 5 மணிக்கே அறிவாலயத்தில் ஆஜராகிவிட்டனர். செயல்தலைவர் ஸ்டாலின் சரியாக 5.45 மணிக்குக் கூட்டம் நடக்கும் அரங்குக்கு வந்துவிட்டார். முதலில் சட்டமன்ற கொறடா சக்கரபாணி மைக்கை பிடித்து, “இக்கட்டான சூழ்நிலையில், நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் சட்டமன்றம் கூடவுள்ளது. சட்டமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து செயல்தலைவர் பேசுவார்” என்றார்.

ஸ்டாலின் பேசுவதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. காலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வார்டு மறுவரையறை பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்தும் விவாதம் எழுந்தது.

வார்டு வரையறை மறுசீராய்வு முறைப்படி நடந்துள்ளதா என்று கேட்கும்போது, தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா எழுந்து, “எங்கள் தொகுதியில் சரியான முறையில் நடந்துள்ளது” என்று பேசியுள்ளார்.

ஆனால், அவருக்குப் பின்னால் இருந்த எம்.எல்.ஏக்கள், “வார்டு மறுவரை அதிமுகவுக்குச் சாதகமாக செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். அப்போது எழுந்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மகனும், எம்.எல்.ஏவுமான செந்தில்குமார், “உள்ளாட்சித் தேர்தலில் வரைமுறை ஒரு தொகுதிக்கு 10 சதவிகிதம் என்ற விகிதத்தில் மறுவரையறை செய்கின்றனர். அதை 20 சதவிகிதமாக அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றார்.

அதன்பிறகு 6.15 மணியளவில் சூடான போண்டா காபி, டீ ஆகியவை எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “இது நமக்கு மிகவும் முக்கியமான கூட்டம், கூட்டத்தொடர் மூன்று நாள்கள் நடக்குமா அல்லது நான்கு நாள்கள் நடக்குமா என்று சொல்ல முடியாது.

ஆகவே, ஒருநாளுக்கு இருவர் விதம்தான் சட்டமன்றத்தில் நாம் பேச முடியும். அதனால் மொத்தமாக மூன்று நாள்களுக்கு ஆறு பேர் மட்டுமே பேச முடியும். அப்படி பேசக்கூடியவர்கள் முக்கியமான பிரச்னைகள் குறித்துப் பேச வேண்டும். அதுபற்றிய யார் பேசுகிறீர்கள், என்ன பேசுகிறீர்கள் என்ற விவரங்களை என்னிடம் கொடுங்கள். அதன்பிறகு நான் யார் பேசுவது என்று முடிவு செய்கிறேன். குமரி மாவட்டம் ஓகி புயலால் அதிகம் பாதிப்பட்டுள்ளது. எனவே சுரேஷ்ராஜன் மட்டும் பேசட்டும்” என்று கூறியுள்ளாராம். அதைத்தொடர்ந்து சரியாக 6.45க்கு கூட்டம் முடிவடைந்தது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, குட்கா விவகாரத்தில் திமுக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ், அரசுக்கு எதிராகப் பன்னீர் தரப்பு எம்.எல்.ஏக்கள் வாக்களித்த வழக்கு, பன்னீர், பாண்டியராஜன் பதவியில் நீடிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்டவை நாளை (இன்று) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதன் போக்கைப் பொறுத்து எங்களின் நிலைப்பாடு இருக்கும்” என்றார்.

‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமா?’ என்ற கேள்விக்கு, “வாய்ப்பிருந்தால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும்” என்று பதிலளித்தார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 8 ஜன 2018