கவலையில் நீது சந்திரா

‘போஜ்புரி படம் ஆபாசமாக இருக்கும் என்ற எண்ணத்தில் என் படத்துக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை’ என்று நடிகை நீது சந்திரா தெரிவித்துள்ளார்.
தீராத விளையாட்டுப் பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், பிரம்மா டாட் காம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. பீகாரைச் சேர்ந்த இவர் போஜ்புரி படங்களைத் தயாரித்து வருகிறார். நீது சந்திரா தேஸ்வா என்ற படத்தை கடந்த 2011ஆம் ஆண்டு தயாரித்தார். இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன பிறகு தற்போது அந்தப் படத்துக்காக போஜ்புரி மொழியில் பாடல் வீடியோ தயாரித்திருக்கிறார்.