மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

இன்றும் தொடரும் போராட்டம்!

இன்றும் தொடரும் போராட்டம்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் இன்றும் தொடரும் என நேற்று (ஜனவரி 7) நடந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காம் நாளாக நேற்றும் நடைபெற்றது. தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் காலம் கடந்தவை என்பதாலும், முறையான பராமரிப்பு இல்லை என்பதாலும், புதிதாக நியமிக்கப்படும் தற்காலிகத் தொழிலாளர்களைக்கொண்டு பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் எனத் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், தற்காலிக ஓட்டுநர்களால் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் சிரமத்திலும் உள்ளார்கள்.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் தொமுச மற்றும் சிஐடியூ உள்ளிட்ட 220 தொழிற்சங்க அமைப்பினர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவு பற்றி பேசிய சி.ஐ.டி.யூ. அமைப்பின் சவுந்தரராஜன், “தற்காலிக ஓட்டுநர்கள், அரசு பேருந்துகளை இயக்கும் நிலையில் விபத்துகள் அதிகரித்துவருகின்றன. எங்கள் தரப்பு வாதம் நீதிமன்றத்தில் நாளை முன்வைக்கப்படும். எங்கள் பிரச்னை தீரும் வரை போராட்டம் தொடரும்” எனக் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018