மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ரஜினி கோட்டையைப் பிடிப்பது உறுதி!

ரஜினி கோட்டையைப் பிடிப்பது உறுதி!

‘நடிகர் ரஜினிகாந்த் கூறுவதைக்கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால், அவர் கோட்டையைப் பிடிப்பது உறுதி’ எனத் திரைப்பட நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

ரஜினி தனது அரசியல் அறிவிப்புக்கு முன் கடந்த 28ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட வாரியாக ரசிகர்களைச் சந்தித்தார் . அப்போது மதுரை ரசிகர்களிடம், “மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஆனால், இந்த மண்டபத்தில் போட வாய்ப்பில்லை. ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன்” என்று பேசினார். அதை நிறைவேற்றும் விதமாக மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள், மதுரை அழகர்கோவில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்தனர்.

ரஜினி ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு மதுரை அழகர்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், “அரசியலில் ஈடுபடுவது உறுதி என அறிவித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதும் ஆதரவாக இருந்து, அவரின் காவலனாக இருந்து தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார். அப்போது, ‘நடிகர்களை மக்கள் ஏற்பார்களா?’ என்ற கேள்விக்கு, “தேர்தலின்போதுதான் பதில் தெரியவரும். மக்கள் விரும்பும் நடிகரான ரஜினிகாந்த்தை அரசியலிலும் வரவேற்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய லாரன்ஸ், “இவ்வளவு நாள் நாம் அரசியல் ஒரு சாக்கடை என்று பேசி வந்தோம். அந்த அசுத்தத்தை ஆன்மிக அரசியல் மூலம் சுத்தம் செய்யவே ரஜினி அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆன்மிகத்துக்கும் மதவாதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. மனச்சாட்சிப்படி உன் மனதில் ஆண்டவன் இருக்கிறான் என்றால் அதுதான் ஆன்மிகம்” என்றார்.

எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவர் ரஜினிகாந்த் என நெகிழ்ச்சியாகப் பேசியவர், “ரஜினிகாந்த் கூறுவதைக் கேட்டு அதன்படி ரசிகர்கள் நடந்தால் அவர் கோட்டையைப் பிடிப்பது உறுதி” என உணர்ச்சியாகப் பேசி முடித்தார்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 8 ஜன 2018