மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

2017இல் ஆடம்பரக் கார்களின் ஆதிக்கம்!

2017இல் ஆடம்பரக் கார்களின் ஆதிக்கம்!

2017ஆம் ஆண்டில் இந்தியச் சந்தையில் ஆடம்பரக் கார்களின் விற்பனை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

பென்ஸ் இந்தியா நிறுவனம் 2017 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 13,500 வாகனங்களை விற்பனை செய்து ஆடம்பரக் கார்கள் விற்பனையில் இந்தியச் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்நிறுவனம் 13,231 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 2017ஆம் ஆண்டு பென்ஸ் நிறுவனம் 11,869 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2016ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 9,924 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஜெர்மனைச் சேர்ந்த ஆடம்பரக் கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ, இந்தியாவில் 2017 ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் 9,800 கார்களை விற்பனை செய்துள்ளது. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பி.எம்.டபுள்யூ 25 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனையில் 2017ஆம் ஆண்டு 252 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

திங்கள் 8 ஜன 2018