மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ரஜினியை இயக்குவது நாங்கள் இல்லை!

ரஜினியை இயக்குவது நாங்கள் இல்லை!

‘நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக இருப்பதாகக் கூறுவது தவறான புரிதல்’ என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபட்நாயக் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தனது அரசியல் என்பது ஆன்மிக அரசியல் என்று கூறியிருந்தார். இந்த ஆன்மிக அரசியல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், ரஜினியை பின்னால் இருந்து இயக்குவது பாஜக தான் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்த நிலையில் ஓகி புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்நாயக் நேற்று (ஜனவரி 7) கன்னியாகுமரி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது உரிமை. அதற்கு பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி இருக்கிறது என கூறுவது தவறான புரிதல்” என்று கூறினார்.

அவர் பேசுகையில், “நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்” என்றும், “நாடு முழுவதும் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க முதற்கட்ட நிதியாக ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 8 ஜன 2018