மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பியூட்டி ப்ரியா: நகத்தைப் பார்த்தீர்களா?

பியூட்டி ப்ரியா: நகத்தைப் பார்த்தீர்களா?

‘நகமே வளர்றதில்லை... உடைஞ்சிடுது’ என்கிற கவலை பல பெண்களுக்குண்டு. அவர்கள் ‘நெயில் எக்ஸ்டென்ஷன்’ செய்துகொள்ளலாம்.

வீட்டு வேலை பார்க்கும்போது நெயில் பாலீஷ் உரிந்து வந்துவிடும் என பலரும் அதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காகவே வந்திருக்கிறது ‘பெர்மனன்ட் நெயில் பாலீஷ்’.

சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்துவந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.

கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக்கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட சில வித்தியாசங்கள் உண்டு. சில நீள வாக்கில் பிரியும். சிலருக்கு குறுக்காகப் பிரியும். நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதேபோல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிதுநேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்

சிவப்பாக இருக்கும் நகங்கள், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 8 ஜன 2018