மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

பனி: பொங்கல் வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

பனி: பொங்கல் வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாகக் கடந்த சில நாள்களாக விமானச் சேவை, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் வாகன ஓட்டிகளும் எதிரே வரும் வண்டிகள் தெரியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 14ஆம் தேதி வரை அம்மாநில அரசு விடுமுறை வழங்கியுள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். எனவே, பள்ளி செல்லும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு வாரத்துக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 8 ஜன 2018