மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

நுகர்பொருள் விற்பனையில் வளர்ச்சி!

நுகர்பொருள் விற்பனையில் வளர்ச்சி!

வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (FMCG) விற்பனை 2016-17 டிசம்பர் - நவம்பர் காலகட்டத்தில் 9 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆய்வு நிறுவனமான நெய்ல்சன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘FMCG தயாரிப்பு நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலிவர், டாபர் மற்றும் மேரிகோ ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் கடுமையான ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன. ஜூலையில் ஜிஎஸ்டி அமலாகவிருந்ததை முன்னிட்டு ஜூன் மாதத்தில் நிறுவனங்கள் போதியளவு இருப்பு வைக்காமல் அமைதி காத்தன. ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் ஜனவரி - மார்ச் வரையிலான காலகட்டத்தில் 4 சதவிகித வளர்ச்சியையும், ஏப்ரல் - ஜூன் கால வளர்ச்சியில் எவ்வித ஏற்ற இறக்கமும் இல்லை. ஜூலை - செப்டம்பர் காலத்தில் 4 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேரிகோ நிறுவனம் ஜனவரி - மார்ச் மாதங்களில் 10 சதவிகித வளர்ச்சி கண்டிருந்த நிலையில் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 9 சதவிகித பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதையடுத்து ஜூலை - செப்டம்பர் காலத்தில் விற்பனை மீண்டும் அதிகரித்து 8 சதவிகிதம் உயர்ந்தது.

டாபர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஜனவரி - மார்ச் மாதங்களில் 2.4 சதவிகித வளர்ச்சி கண்டிருந்த நிலையில் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் 4.4 சதவிகித பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இதையடுத்து ஜூலை - செப்டம்பர் காலத்தில் விற்பனை மீண்டும் அதிகரித்து 7.2 சதவிகிதம் உயர்ந்தது.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

திங்கள் 8 ஜன 2018