மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

கொண்டாடிய மார்ஷ்: பதறிய ஸ்மித்

கொண்டாடிய மார்ஷ்: பதறிய ஸ்மித்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டியின் முதல் இன்னிங்ஸில் மார்ஷ் சகோதரர்கள் இருவரும் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை முன்னிலை பெற உதவினர்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 346 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால், மார்ஷ் சகோதரர்கள் இருவரும் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.

ஷான் மார்ஷ் முதலில் சதம் அடித்தார். அவர் 156 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். போட்டியின் இடையே அவரது சகோதரர் மிட்சல் மார்ஷ் சதம் அடித்ததை, ஷான் மார்ஷ் இரண்டு ரன்கள் ஓடும் பொழுது இடையே நின்று கொண்டாடினார். அப்போது அவரை ரன் அவுட் ஆக்கிவிட வாய்ப்புள்ளதைக் கண்ட கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறிது நேரம் பதற்றமடைந்தார். ஆனால், இருவரும் சரியே ரன் ஓடிய பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 8 ஜன 2018