ஜேஜே ஆட்டம் வீணானது!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (ஜனவரி 7) சென்னையின் எஃப்.சி., டெல்லி டைனமோஸ் அணிகள் மோதிய போட்டி சமனில் முடிந்தது.
இந்தியன் சூப்பர் லீக்கின் இந்த சீசன் கடந்த நவம்பர் மாதம் (2017) தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலம் கொண்டு விளையாடின. போட்டியின் 24ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் டேவிட் நேகத்தி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். முதல் பாதி முடிவதற்குச் சிறிது நேரமே இருந்த நிலையில் சென்னை அணியின் ஜேஜே லால்பெக்குல்லா முதல் கோல் அடித்து போட்டியை 1-1 என சமன் செய்தார்.