மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜன 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

தூக்கமின்மையே பலவற்றுக்கும் முதன்மை காரணமாக அமைகிறது. இதற்கு ஸ்மார்ட்போனும் ஒரு காரணம் என்பது பற்றி ஏற்கெனவே பார்த்தோம். அதனால் எடை கூடுவது, உடல் பாதிப்புகள் ஏற்படுவது பற்றியும் பேசினோம். தூக்கமின்மை பற்றி இன்னும் சில விஷயங்களை இன்று பார்க்கலாம்.

அதிகமான வேலைப்பளு, கவலை, தோல்வி போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படும். இதைச் சரிசெய்வது பிரச்னையை முடிப்பதுதான். இதற்கான சரியான தீர்வு நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது உங்கள் கவலைக்கான காரணத்தை மறப்பதுதான். சில வலி மருந்துகளாலும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது உடலில் மெலட்ரின் என்ற ஒரு வேதியல் பொருள் சுரக்கிறது. இது உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த வேதிப் பொருள்களை வலி மாத்திரைகளின் வேதி பொருள்கள் பாதிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம்.

வழக்கமான நேரத்தை மாற்றி தூங்குவதும் தூக்கமின்மைக்குக் காரணமாகும். நமது மூளை தனக்குள்ளாக ஒரு கடிகார நேரத்தைக் கணித்துவைத்திருக்கும். நாம் அந்த நேரத்தை கடந்து தூங்கினாலோ அல்லது சீக்கிரம் தூங்க முயன்றாலோ தூக்கம் வராது. இது சாதாரணமாக, ஓரிரு நாள்களில் சரியாகிவிடும்.

தூக்கம்வர தூக்க மாத்திரையை உட்கொள்வது சரியான முடிவு இல்லை. தூக்க மாத்திரையால் பக்க விளைவுகள் மிகவும் அதிகம். முடியாத நிலையில் உடலில் ஏற்படும் வலியின்போது மட்டுமே தூக்க மாத்திரையை உபயோகிக்க வேண்டும்.

இதை தவிர உணவு பழக்கங்கள் மூலமாகவும் இந்தத் தூக்கமின்மையை கட்டுபடுத்த முடியும். மெலடோனின் வேதிப்பொருள் சுரக்க உதவும் உணவுகளைத் தூங்கப்போவதற்கு முன் உட்கொள்வதால் எளிதில் தூங்க முடியும். செர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளில் மெலடோனினை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.

கடும் தூக்கமின்மை

ஒரு மாதத்துக்குக் குறைவாகத் தூக்கமின்மைக் கோளாறு இருந்தால் அது கடும் தூக்கமின்மை எனப்படுகிறது. தூக்கம் வராமை, தொடர்ந்து தூங்க இயலாமை அல்லது சரியான தூக்கமின்மை ஆகியவையே தூக்கமின்மைக் கோளாறின் இயல்புகளாகும். தூங்குவதற்கான வாய்ப்பும் சூழ்நிலையும் இருந்தபோதிலும் தூக்கமின்மைக் கோளாறு ஏற்படும். இதனால் பகல் நேர செயல்பாடுகளுக்கு இடையூறு உண்டாகும். கடும் தூக்கமின்மையைக் குறுகிய கால தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் தொடர்பான தூக்கமின்மை என்பர்.

நீடித்தத் தூக்கமின்மை

இது ஒரு மாதத்துக்கு மேலும் நீடிக்கும். இது இன்னொரு கோளாறாலும் உண்டாகலாம் அல்லது அதுவே முதன்மையான கோளாறாகவும் இருக்கலாம். மன அழுத்த இயக்கு நீர்களின் அளவு அதிகரித்தல் அல்லது சைட்டோகைன்களின் அளவு மாற்றங்களால் நீடித்தத் தூக்கமின்மை ஏற்படலாம். காரணத்தைப் பொறுத்து அதன் விளைவுகளும் மாறுபடும்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

திங்கள் 8 ஜன 2018