மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் பலி!

பனிச்சரிவில் சிக்கி இந்திய ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதைந்து இந்திய ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் இந்திய ராணுவப் பொறியாளர் உள்பட சிலர் நேற்று முன்தினம் (ஜனவரி 5) காரில் குப்வாராவில் இருந்து கர்ணா நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் டங்தர் பகுதியில் சத்னா டாப் என்ற இடத்தில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் பனிச்சரிவுக்குள் புதைந்து உயிருக்குப் போராடினார்கள். பின்னர் தகவலறிந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மலையில் சிக்குவோரை மீட்புப் படையினரும் அங்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பனிச்சரிவில் சிக்கியோரில் ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றுவரும் நிலையில், மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பனிச்சரிவு விபத்தில் ஒரு வயதான குழந்தையின் உடலை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 7 ஜன 2018