மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

எடப்பாடி –பொன்னார் திடீர் சந்திப்பு!

எடப்பாடி –பொன்னார் திடீர் சந்திப்பு!

தமிழக அரசு குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ச்சியாக விமர்சித்துவரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று(ஜனவரி 7) அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, “அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம். அக்கட்சி எப்போது வேண்டுமானாலும் சரியும்” என்று விமர்சித்திருந்தார். இதேபோல் கடந்த ஜனவரி 6ஆம் தேதி, அதிமுகவின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் காட்டமாக அவர் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திற்குப் போய் பொன். ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பதற்குத் தமிழக அரசு தனது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியதாகப் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

ஞாயிறு 7 ஜன 2018