மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

தற்காலிக ஓட்டுநர்: பேருந்து மோதி ஒருவர் பலி!

தற்காலிக ஓட்டுநர்: பேருந்து மோதி ஒருவர் பலி!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்பட்ட பேருந்துகள் பல்வேறு இடங்களில் விபத்துக்குள்ளாகி வருவதும் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நான்காம் நாளாகத் தொடர்கிறது. பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால் தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் காலம் கடந்தவை என்பதாலும், முறையான பராமரிப்பு இல்லை என்பதாலும், புதிதாக நியமிக்கப்படும் தற்காலிகத் தொழிலாளர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் எனத் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த சீயோன், சாமுவேல் மற்றும் சிறுமி சாரா ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தை அவர்கள் கடந்து கொண்டிருந்தபோது, பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் சீயோனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சீயோன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சாமுவேல் மற்றும் சிறுமி சாரா ஆகியோர் காயமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. இருசக்கர வாகனத்தின் மீது மோதிய அரசுப் பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் ஏழுமலை என்பவரைப் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

ஞாயிறு 7 ஜன 2018