மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 ஜன 2018

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவும் இருக்கிறார்!

சாமி ஸ்கொயர்: த்ரிஷாவும் இருக்கிறார்!

விக்ரம்- ஹரி கூட்டணியில் உருவாகிவரும் சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவும் நடிக்கிறார் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

சாமி படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் சாமி ஸ்கொயரில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தமாகினர். ஆனால் படப்பிடிப்பு துவங்கத் தாமதமானதால் படத்திலிருந்து வெளியேறுவதாக த்ரிஷா அறிவித்திருந்தனர். இது குறித்து படக் குழு சார்பில் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காத நிலையில் இயக்குநர் ஹரி இந்த பாகத்திலும் த்ரிஷா தொடர்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

சாமி 2 என்ற பெயரில் படப்பிடிப்பைத் தொடங்கி பின்னர் சாமி ஸ்கொயர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் படிப்பிடிப்பு 45 சதவீதம் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெல்லையில் இன்று தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் ஹரி.

“சாமி படத்திற்குப் பிறகு அதோட இரண்டாம் பாகத்தை சாமி ஸ்கொயர் என்கிற பெயரில் உருவாக்கி வருகிறோம். இந்தப் படத்தோடு 50 சதவீத படப்பிடிப்பு திருநெல்வேலியில்தான் நடக்க இருக்குது. இன்னைக்கு ஆரம்பிச்சிருக்கோம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும்” என்றார்.

இந்த படத்தைப் பத்தி சொல்லுங்க என்று கேட்டதற்கு, “இதுல கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இவங்க ரெண்டு பேரும் ஹீரோயினா நடிக்கிறாங்க. மொத்தம் 5 சாங், 4 பைட், 2 சேசிங் இந்த படத்துல இருக்குது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மத்தபடி இந்தப் படத்தை பத்தி அதிகம் சொல்ல முடியாது” என்றார். அதுவரை வீடியோ எடுப்பது தெரியாமல் படம் குறித்து பேசிக் கொண்டிருந்தவர் “என்ன வீடியோலாம் எடுக்கிறீங்க” என்று வீடியோ எடுத்ததையும் கண்டுபிடித்து விட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

ஞாயிறு 7 ஜன 2018